திங்கள், 30 செப்டம்பர், 2019

இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது சவுதி அரேபியா!

ரூ.7 லட்சம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா 100 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடி) பெட்ரோகெமிக்கல்ஸ், ஆற்றல், சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, சுரங்கம், விவசாயம் போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு...

றுக்கமான உடைகள் அணிபவர்களுக்கும், பொது இடங்களில் முத்தம் கொடுப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

credit ns7.tv சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக அறிவித்த மறுநாளே இறுக்கமான உடைகள் அணிபவர்களுக்கும், பொது இடங்களில் முத்தம் கொடுப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. ஆண்களும், பெண்களும் நவநாகரிக ஆடைகளை அணிந்துகொள்ள முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்றாலும் அவர்களின் உடை கண்ணியம்மிக்கதாக இருக்க வேண்டும், பொது இடங்களில்...

பதவி விலகிய நீதிபதி தஹில் ரமானி மீது முறைகேடு புகார்...!

பதவி விலகிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது முறைகேடு புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து, மத்திய உளவுத்துறையின் அறிக்கை மீது, விசாரணை நடத்த சிபிஐக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, மேகாலய உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், பணியிட மாற்றத்தை...

பெற்றோரை கைவிட்டால் இனி 6 மாதம் சிறை?

வயதான பெற்றோரை கைவிட்டால், பிள்ளைகளுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவுள்ளது. பெற்றோர்களை முதுமை காலத்தில் பாதுகாக்க வேண்டிய பிள்ளைகள் அவர்களை தவிக்க விடுவது அதிகரித்து வருகிறது. வயதான காலத்தில் கவனிக்க யாருமற்ற சூழலில் பெற்றோருக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள பிரதமர் அலுவலகம், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூகம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு...

கீழடியை பார்வையிட குவியும் மக்கள்!

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பார்வையிட்டனர்.  சிவகங்கை மாவட்டம் கீழடியில், 5வது கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகள் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தொல்லியத்துறை கண்காணிப்பாளர்கள் 3 பேரின் கீழ், அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அகழாய்வு பணிகளை காண, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் கீழடியில் குவிந்தனர்....

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி உள்ளிட்டவற்றை தடுக்கும் முயற்சியாக அனைவரும், தங்களது ஆதார் கணக்குடன், பான் எண்ணை இணைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பலரும் தங்களது பான் எண்களை ஆதாருடன் இணைத்து வருகின்றனர். அவ்வாறாக, இணைக்காதவர்கள் நடப்பு மாதமான செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைத்துவிடவேண்டும் எனவும், அதுவே கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...

சனி, 28 செப்டம்பர், 2019

இந்தியாவில் சுமார் 22 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு...! பலனளிக்குமா புதிய திட்டம்?

2018ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 21.5 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 ம் ஆண்டைவிட 2018ம் ஆண்டில் 17 சதவீதம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. உலகிலேயே அதிக காசநோய் பாதிப்புகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பிரதான இடத்தில் இருக்கிறது. உலகளவில் காசநோயால் பாதிக்கப்படும்...

TNPSC மொழிப்பாட சர்ச்சை:

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2 முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு, டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி,  ➤ புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குரூப் II  மற்றும் குரூப் IIA தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ➤ பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதலாம் என்றிருந்த நிலையை மாற்றி, முதனிலை (Prelims) மற்றும் முதன்மை...

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு!

கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.  இதனையடுத்து, கர்நாடகா இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில்...

அணு ஆயுத போர் வெடித்தால், அதற்கு ஐ.நா. சபையே பொறுப்பு

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத போர் வெடித்தால், அதற்கு ஐ.நா. சபையே பொறுப்பு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார்.  இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் நல்லுறவை பேண முயற்சிகள் மேற்கொண்டதாகக் கூறினார்....

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

புனேவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 15க்கும் மேற்பட்டோர் பலி..!

புனேவில் பெய்த கனமழையால் 15க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 16 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்....

இந்தியாவின் இளம் தொழிலதிபராக உருவெடுத்த “OYO” ரிதேஷ் அகர்வால்!

இந்தியாவின் மிக இளம் தொழிலதிபராக ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரிதேஷ் அகர்வால் தேர்வாகியுள்ளார். IIFL India Hurun India Rich List of 2019 பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான 25 வயதே ஆன ரிதேஷ் அகர்வால், 7500 கோடி சொத்துமதிப்புடன் இந்தியாவின் இளம் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்....

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள் தான்!

IIFL India Hurun India Rich List of 2019 பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் 3.8 லட்சம் கோடிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை பிடித்திருக்கிறார் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி. இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் யார், அவர்கள் நிறுவனம் மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தற்போது பார்க்கலாம். 1.முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர்...

காஷ்மீர் விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்..!

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதுதொடர்பாக...

வியாழன், 26 செப்டம்பர், 2019

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவி...!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாணவி லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் கூலித் தொழிலாளியின் மகள் சுபாஷினி. பார்வை குறைபாடு உடைய இவர் சேலம் அயோத்யா பட்டணத்திலுள்ள பார்வை குறைபாடு உள்ளோருக்கான விடுதியில் தங்கியபடி தனியார் கல்லூரியில்...

Authors Image அந்தமான் - நிகோபர் தீவுகள் இன்னும் சில ஆண்டுகளில் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐநா. புவி வெப்பமயமாவதால் உருவாகும் பருவநிலை மாற்றம் உலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்றே சொல்லலாம். இதை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் பல முயற்சிகளை எடுத்தாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமையின் கையே ஓங்கியிருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுக்குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எழில் கொஞ்சும் தீவு நகரமான அந்தமான் - நிகோபர் இன்னும் சில ஆண்டுகளில் மனித இனம் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. புவி வெப்பமயமாதல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை மேலும் 2 டிகிரி அதிகரிக்கும் என்றும், பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் மேலும் உயரும் என எச்சரித்துள்ளது ஐநா. 2100ம் ஆண்டு 30 முதல் 60 சென்டிமீட்டர் வரை கடல்நீர் மட்டம் உயரலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலின் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கினால் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாகவே உலகளவில் 90 சதவீதத்துக்கு அதிகமான வெப்பநிலையை கடல்கள் உள்வாங்கி வந்துள்ளன என்றும், 1993ம் ஆண்டு முதல் கடல்களின் வெப்பநிலை இரு மடங்கு உயர்ந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதுடன், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களை சந்திக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்து. இதே நிலை நீடித்தால் அந்தமான் - நிகோபர், மாலத்தீவுகள் உட்பட உலகின் சிறிய தீவுக்கூட்டங்களில் வசிக்கும், 6 கோடி மக்களும் வேறிடத்துக்கு புலம் பெயர வேண்டியிருக்கும் என்பதே ஐநாவின் எச்சரிக்கை மணி.

credit ns7.tv போக்ஸோ நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. செப்டம்பர் 2016ம் ஆண்டு 12ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவியை பள்ளியில் இருந்து கடத்திச்சென்று 4 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக பஞ்சாப் சிங் மற்றும் யஷ்வீர் சிங் என்ற இருவர், கடந்த ஏப்ரல் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த...

அந்தமான் - நிகோபர் தீவுகள் குறித்து ஐ.நா அதிர்ச்சி தகவல்..

credit ns7.tv அந்தமான் - நிகோபர் தீவுகள் இன்னும் சில ஆண்டுகளில் வாழத்தகுதியில்லாத இடமாக மாறிவிடும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐநா.  புவி வெப்பமயமாவதால் உருவாகும் பருவநிலை மாற்றம் உலகை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்றே சொல்லலாம். இதை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் பல முயற்சிகளை எடுத்தாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமையின் கையே ஓங்கியிருக்கிறது. இந்நிலையில்...

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்-டெல்லி அரசு அறிவிப்பு!

credit ns7.tv டெல்லியில், வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் கெஜ்ரிவால் அரசு, 2020ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற...

புதன், 25 செப்டம்பர், 2019

சின்மயானந்த் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவி கைது..!

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவியை பண மோசடி வழக்கில் உத்திரப்பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.  பாஜகவைச் சேர்ந்த சின்மயானந்த் நடத்தும் சட்டக்கல்லூரியில் பயின்று வந்த மாணவி, அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். தன்னை தவறாக வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாணவி குற்றம் சாட்டியிருந்தார். மூக்கு...

பருவநிலை மாற்றத்திற்கென தனி ஒரு ஆளாக போராடும் ஸ்வீடன் போராளி கிரேட்டா தன்பர்க்.

credit ns7.tv பருவநிலை மாற்றத்திற்கென தனி ஒரு ஆளாக போராடும் ஸ்வீடன் போராளி கிரேட்டா தன்பர்க். யார் இந்த கிரேட்டா? இவர் செய்த மாற்றங்கள் என்ன? ஸ்வீடனை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்ற மாநாட்டின் கதாநாயகியாக மாறியுள்ளார். 16 வயதில் ஐ.நா மன்றத்தில் உரை,  நோபல் பரிசுக்கு பரிந்துரை என கால நிலை மாற்றத்திற்கான தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் கிரேட்டா தன்பெர்க்....

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசு சார்பில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தனியார் நிறுவனங்களின் விவரங்களை ஆராய வேண்டும் என்று மற்றொரு...

சிறுவர், சிறுமிகளை டார்ச்சர் செய்கிறார்கள் : நித்யானந்தா மீது சிஷ்யை புகார்

நித்யானந்தா சிறுவர், சிறுமிகளை கொடுமைப்படுத்துகிறார் என அவர் மீது குற்றம் சாட்டி அவரது முன்னாள் சிஷ்யை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற பெண் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நித்தியானந்தா ஆசிரமத்தில், தான்...

பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக பேசுவதை முடித்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம்

credit ns7.tv பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக பேசுவதை முடித்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஐ.நா அவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா உச்சிமாநாடு, நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, அதிகமான போதனைகளைவிட மிகச் சிறிய செயல் சிறந்தது...

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் சேகரிக்கப்பட்ட 1000 கிலோ பிளாஸ்டிக்!

கோவா கடற்கரையில் 1000 கிலோவிற்கு மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம் கோவா. இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். இந்தியாவில் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒருமுறையாவது கோவாவிற்கு...

ஒரே அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்

ஒரே நாடு ஒரே ரேசன் வரிசையில், ஒரே அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.   ஆதார், பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் எண் போன்ற அனைத்தும் தகவல்களும் பல்நோக்கு மின்னணு அடையாள அட்டையில் இடம்பெறும் என்று கூறினார்.  குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் ஒரே அடையாள அட்டையில் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும்...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கர்நாடகாவில் 15தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க இந்த இடைத் தேர்தலில், நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. அவற்றில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில்...

கீழடியில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்

கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்திடும் வகையில், அங்கு சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, தொல்லியல்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார்.  கீழடியில் நடத்தப்பட்ட 4-ம் கட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல், கி.பி. முதல் நூற்றாண்டு வரை கீழடி வளமான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக...