செவ்வாய், 3 செப்டம்பர், 2019

8 முக்கிய துறைகளில் வளர்ச்சி 2.1% ஆக குறைந்தது!

Image
பொருளாதாரத்திற்கு தூணாக விளங்கும் 8 முக்கிய துறைகளின் ஜூலை மாத வளர்ச்சி 2.1% குறைந்துள்ளது.
பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் ஜூலை மாத வளர்ச்சி 2.1% ஆக குறைந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ( ஜூலை 2018) இது 7.3% ஆக இருந்தது.
இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாத காலகட்டத்தில் இந்த வளர்ச்சி 3% ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.9% ஆக வளர்ச்சி விகிதம் இருந்தது.
வாங்கும் திறன் மற்றும் குறைந்துவிட்ட உற்பத்தி திறனின் காரணமாக 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜிடிபி 5% ஆக சமீபத்தில் குறைந்தது.
தற்போது வெளிவந்துள்ள தரவுகளின் படி இந்த 8 முக்கிய துறைகளில் 5 துறைகளின் வளர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

credit ns7.tv