கீழடிக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த ஜூன் 13ம் தேதி 5ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. அதில், சுமார் எட்டரை ஏக்கர் நிலத்தில் 52 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் சங்கு வளையல், இரும்பு குண்டு, உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. செப்டம்பர் 30ம் தேதியுடன் அகழாய்வு நிறைவு பெறவிருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
இதனிடையே, கீழடியில் நடைபெற்று வரும் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கீழடியை பார்வையிட வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், "கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும்” என்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கூறினார்.
credit ns7.tv