திங்கள், 7 அக்டோபர், 2019

புதுப்பிக்கப்படாத கே.ஆர்.பி அணை மதகுகளால் வெள்ள அபாயத்தில் பொதுமக்கள்!

Image
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மதகுகளில் ஏற்பட்ட நீர் கசிவால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி. அணை அமைந்துள்ளது. 52 உயரத்தில் 8 மதகுகளுடன் கட்டப்பட்ட இந்த அணையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மதகு பழுதடைந்து தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து தற்காலிகமாக புதிய மதகு அமைக்கப்பட்டது. 
இதையடுத்து கேஆர்பி அணையை ஆய்வு செய்த பொதுப் பணித் துறை அதிகாரிகள் அனைத்து மதகுகளும் உறுதியற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இதன் எதிரொலியாக 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து மதகுகளும் புதுப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தொடர் கன மழையின் காரணமாக  கேஆர்பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. 
தற்போது நீரின் அழுத்தம் காரணமாக சேதமடைந்த மதகுகள் வழியே நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ள அபாயத்தில் உள்ள பொதுமக்கள் மதகுகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

credit ns7.tv