சுபஸ்ரீயின் மரணத்திற்கு காற்றின் மீதுதான் வழக்கு போட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்று தொல்திருமாவளவன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்களின் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கினை திரும்பப் பெறுவதற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மத்திய அரசை திருப்திப்படுத்துவதில் நேரம் செலவழிக்கும் அதிமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில்லை என்றும் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
இதன் பின்னர், சுபஸ்ரீ மரணத்திற்கு காற்று மீது தான் வழக்கு போட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.
credit ns7.tv