ஞாயிறு, 5 ஜனவரி, 2020

நீட் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரி தமிழக அரசு சார்பில் ரிட் மனுதாக்கல் !

Image
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என 2017-2018 இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல்மருத்துவ கவுன்சில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி யாரும் நீதிமன்றத்தை நாடாத நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல்மருத்துவ கவுன்சில் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரி தமிழக அரசு சார்பில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், 2017-2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும்,அவர்களின் மருத்துவக் கனவு கானல் நீராகியுள்ளதாகவும் புள்ளி விவரங்களோடு  தமிழக அரசு தெரிவித்துள்ளது.நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில், ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

credit ns7.tv