புதன், 11 மார்ச், 2020

பொருளாதார பாதிப்பிற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் - திருமாவளவன் March 11, 2020

Image
பொருளாதார பாதிப்பிற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதாரத் திருவிழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பாராம்பரிய உணவு பொருள் கண்காட்சியையும், இரத்ததான முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து மத்தியஅரசு கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். உலக அரங்கில் மிகமோசமாக விமர்சிக்கப்படும் அளவிற்கு பொருளதாரம் வீழ்ந்துள்ளதாக விமர்சித்தார்.
credit ns7.tv