ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

3 ஆண்டுகளில் டாடா மோட்டர்ஸின் ஒரு லட்ச ரூபாய் பங்கு மதிப்பு 21,000 ரூபாயாக சரிவு!

டாடா மோட்டார்ஸ் நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று மும்பை பங்கு சந்தையில் 524.7 ரூபாயாக இருந்த டாடா மோட்டார்ஸின் பங்கு மதிப்பு, 2019 ஆகஸ்ட் 29ல் 114 ரூபாயாக சரிந்துள்ளது.  அதாவது 2016ல் ஒரு லட்ச ரூபாயாக இருந்த முதலீடு 2049ல் 21,726 ரூபாயாக சரிவடைந்துள்ளது.
உள்ளூர் சந்தையில் தேவை குறைவு, அதன் பிரட்டன் நிறுவனமான ஜாக்குவார் லேண்ட் ரோவரின் உலகளாவிய வர்த்தகத்தில் சுணக்கம், 
கடன் மதிப்பீடு தரமிறங்குதல் உள்ளிட்ட காரணங்கள் 3 ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸின் பங்கு சந்தை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் அந்நிறுவன முதலீட்டாளர்கள் 1.13 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். அந்நிறுவனத்தின் தற்போதைய மூலதனம்  33,016 கோடி ரூபாயாக உள்ளது. இது 2016ல் 1.46 லட்சம் கோடியாக இருந்தது.
இதனிடையே 52 வாரங்களில் இல்லாத வகையில் டாடா மோட்டார்ஸின் பங்கு மதிப்பு ஆகஸ்ட் 22ல் 106 ரூபாயாக சரிந்தது குறிப்பிடத்தகக்கது.
வருமானம்:
கடந்த 3 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. 2016ல் அதன் நிகர வருவாய் 11,100 கோடி ரூபாயாகவும், 2017ல் 6,063 கோடி ரூபாயாகவும், 2018ல் 6813 கோடி ரூபாயாகவும் இருந்தது. 2019ல் 28,933 கோடி ரூபாயாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது.

credit ns7.tv