credit ns7.tv
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களின் நலனுக்கு தேவையானவற்றை செய்ய பிரதமர் விக்கிரமசிங்கேவின் கட்சி தவறுவதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜாஃப்னா பகுதியில் தமிழ் பேசும் மக்களிடையே உரையாற்றிய அதிபர் சிறிசேனா, தனது கூட்டணியில் உள்ள பிரதமர் விக்கிரமசிங்கேவின் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
2015ல் அதிபர் சிறிசேனா, பிரதமர் விக்கிரமசிங்கே இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கினர். இந்த ஆட்சியே தற்போது இலங்கையில் இருந்து வருகிறது. தமிழர்களின் நலனுக்காக புதிய அரசியலமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் அரசில் ( விக்கிரமசிங்கே கட்சியினர்) உள்ள இவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க தவறிவிட்டதாக சிறிசேனா கூறினார்.
வரும் டிசம்பர் 8ம் தேதிக்குள் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டிய சூழலில் விக்கிரமசிங்கேவை எதிர்த்து, சிறிசேனா கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.