credit ns7.tv
கீழடியைப் போன்று காவிரி, தாமிரபரணி, பாலாறு போன்ற இடங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கீழடியில் தமிழக வாழ்வும் வரலாறும் என்ற தலைப்பில் மேடை நிகழ்ச்சி ஒன்று தஞ்சையில் நடைபெற்றது. இதில் கீழடியில் இரண்டு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கீழடியில் முழுமையாக ஆய்வு செய்தால் மேலும் பல ஆதாரங்கள் கிடக்கும் என்று தெரிவித்தார். கீழடியில் தற்போது 10 சதவிகித ஆய்வுகள் மட்டுமே முடிந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது கீழடியில் ஆய்வு வேண்டும் என்றும் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ஆய்வு செய்தார். இதையடுத்து கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற 32 குழிகளை மட்டுமே பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும், மற்ற 22 குழிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளை பார்வையிட பொதுமக்களையும், ஊடகங்களையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு ரோஹித் நாதன் உத்தரவிட்டார்.
மேலும் 30 நிமிடங்களுக்கு 100 பேரை மட்டுமே பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும், உரிம அனுமதி கடிதம் பெற்ற பின்னரே பள்ளி, கல்லூரி மாணவர்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும் தொல்லியல் துறை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் உத்தரவிட்டுள்ளார்.