வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றால் உரிமையாளரை எச்சரிக்கும் கருவியை, மதுரையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில் வீட்டின் உரிமையாளர்களை எச்சரிக்கும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார் மதுரையை சேர்ந்த இளைஞர். டிவிஎஸ் நகரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி பாண்டியன், நவீன கருவி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்தால், உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வரும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உரிமையாளர்கள் செல்போன் அழைப்பை ஏற்காத நிலையில், அவரது உறவினர் எண்ணுக்கோ அல்லது அருகே உள்ள காவல் நிலையத்துக்கோ எச்சரிக்கை அழைப்பு செல்லும். இந்த கருவியை கண்டுபிடித்த இளைஞருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
credit ns7.tv