credit ns7.tv
மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக மத்திய அரசு அறிவித்த பின்னர்தான் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் களைவது குறித்து காணொலிக் காட்சி மூலம் *மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் காபா தலைமையில் தமிழ்நாடு மாநில தலைமைச் செயலாளர் சண்முகம், சுற்றுச்சூழல்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்காணி, கேரள மாநில தலைமைச் செயலாளர், கேரள சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் நியுட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குனர் விவேக் தாதர் ஆகியோர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த திட்டத்திற்கான மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை டாடா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2018ஆண்டே பெற்றிருந்தாலும், வனவுயிர் வாரிய அனுமதியும் அவசியமாகும். இந்த அனுமதியை கோரி தமிழக அரசிடம் டாடா நிறுவனம் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தது. இந்த திட்டம் அமையவுள்ள 66ஏக்கர் பரப்பளவின் எல்லையானது கேரள மாநிலத்தில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் எல்லையிலிருந்து 4.9கி.மீ தூரத்திற்குள்ளாக இருப்பதால் கேரள அரசின் ஒப்புதலும் அவசியம் எனும் அடிப்படையில், கேரள அரசிடம் தமிழக அரசு இத்திட்டத்திற்கான வனவுயிர் வாரிய அனுமதி வழங்குவது குறித்த கருத்தைக் கேட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கேரள அரசு தலைமைச் செயலாளர் "மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சுற்றுச்சூழல் முக்கியம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக்கோரி ஏற்கெனவே வரைவு திட்ட அறிக்கையை நாங்கள் மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளோம் அதனடிப்படையில் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவித்த பின்னரே நியூட்ரினோ திட்டம் குறித்த கேரள அரசின் கருத்தை தெரிவிக்க முடியும்" எனக் கூறினார்.

பின்னர் பேசிய தமிழக அரசு தலைமைச் செயலாளர் "கேரள அரசு இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுத்த பின்னரே தங்களால் இத்திட்டத்திற்கான வனவுயிர் வாரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும்" எனக் கூறியுள்ளார்.