source ns7.tv
சிதம்பரம் அருகே வீராணம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வாழைக்கொல்லை கிராமம் அருகே உள்ள பாலம் லேசாக உள்வாங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே பொதுப்பணித்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் செம்மண் கொட்டி பொதுப்பணித்துறையினர் கரையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். இதனால் சேத்தியாதோப்பு-காட்டுமன்னார்கோவில் இடையே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.