மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சியமைத்து 100 நாட்கள் ஆனதை கொண்டாட உள்ள பாரதிய ஜனதா கட்சியை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆனதை பல்வேறு மாநிலங்களில் அக்கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை விமர்சிக்கும் வகையில், பொருளாதார மந்த நிலை காரணமாக ஆட்டோமொபைல் துறை, போக்குவரத்துத் துறை, சுரங்கத் துறை உள்ளிட்டவை மோசமான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த கொண்டாட்டங்கள் தேவை தானா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்பதை ஒப்புக் கொண்டு, அதற்கான தீர்வு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
credit ns7tv