புதன், 4 செப்டம்பர், 2019

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததை கிண்டலாக சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம்...!

Image
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் திகார் சிறைக்கு அனுப்புங்கள் என சிபிஐ கோரிக்கை வைக்க அதனை ஏற்க மறுத்து நாளை வரை சிபிஐ காவலுக்கு அனுப்பி உள்ளது உச்சநீதிமன்றம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்தின் விசாரணைக் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே, ஜாமீன் அளிக்கக் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்திடம் தாங்கள் நடத்தும் விசாரணை நிறைவடைவதால், அவரை திகார் சிறையில் அடைக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதற்கு சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிதம்பரத்தை, வரும் 5ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டனர். 
தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்த போது, 15 நாட்கள் சிபிஐ காவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாக குறைந்து விட்டதை நினைத்துப் பாருங்கள் என்று கூறியபடி ப.சிதம்பரம் சென்றார். 

credit ns7.tv