புதன், 4 செப்டம்பர், 2019

இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவு!

Image
இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 770 புள்ளிகள் சரிந்து 36,562 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 10,797 புள்ளிகளில் வர்த்தகமானது. 
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்ததாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வங்கிகள் இணைப்பு அறிவிப்பும், பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. 
இந்நிலையில் மோட்டார் வாகன நிறுவனங்களின் பங்குகள், வங்கிகளின் பங்குகள் சரிவை சந்தித்ததை தொடர்ந்து, சென்செக்ஸ் இன்று மாலையில் 770 புள்ளிகள் அளவிற்கு கடும் வீழ்ச்சி கண்டது. இதனால், முதலீட்டாளர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்

credit Ns7.tv

Related Posts: