ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 'யுபிஐ எச்சரிக்கை' செய்தியை அனுப்பியுள்ளது. இந்த எச்சரிக்கை செய்தி மற்ற UPI பயனர்களுக்கும் பொருந்தும் என்பதனால் அனைவரும் உஷார் ஆக்கிக்கொள்ளுங்கள்.
ஐசிஐசிஐ வங்கி எச்சரிகை சமீபத்திய யுபிஐ தொடர்பான மோசடிகள் அடுத்தடுத்து அதிகமாக நடந்து வரும் காரணத்தினால், அனைத்து ஆன்லைன் வங்கி பயனர்களுக்கும், குறிப்பாக யுபிஐ பயன்பாடுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு, மோசடி சம்பவங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு ஐசிஐசிஐ வங்கி எச்சரித்துள்ளது.
UPI பயனர்களுக்கு ஆபத்து குறிப்பாக Paytm, Google Pay, PhonePe மற்றும் பிற UPI அடிப்படையிலான கட்டண பயன்பாடுகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. UPI பயனர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் குற்றங்கள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த UPI மோசடியிலிருந்து எப்படி உங்களை உஷாராகப் பார்த்துக்கொள்வதென்று பார்க்கலாம்.
#1 அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் உஷார் ஆக்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுடைய டெபிட் கார்டு அல்லது வங்கி விவரங்களைக் கேட்டால் உடனே அழைப்பைத் துண்டித்துவிடவும்.
#2 உங்கள் UPI கணக்கைப் பதிவு செய்யும்பொழுது எப்போதும் சொந்தமாகப் பதிவு செய்யுங்கள். அடுத்தவரின் உதவியை ஒருபோதும் நாட வேண்டாம்.
#3 மோசக்காரர்கள் குறிப்பாக புதிய Virtual Payment Address-VPA சேவையைப் பயன்படுத்தும் பயனர்களையே குறிவைக்கின்றனர்.
#4 எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு வரும் எந்தவொரு லிங்க்கையும் ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது.
#5 UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் போது, எஸ்எம்எஸ் வழியாகப் பணத்திற்கான கோரிக்கையைப் பெற்றால் மிகவும் கவனமாக இருங்கள்.
#6 மோசடி செய்பவர், உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்குப் போலி OTP ஐ உருவாக்கலாம். உங்களுக்குச் சந்தேகப்படும்படி OTP எண்கள் உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்தால் உடனே வங்கியில் புகார் அளித்துடுங்கள்.
#7 OTP எண்களை அழைப்பில் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
#8 உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முயற்சிக்கும் போது மட்டுமே OTP எண்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.
#9 யாராவது உங்கள் அக்கௌன்ட்டிற்கு பணத்தை மாற்றினால் அல்லது உங்கள் கணக்கில் பணத்தைச் சேர்த்தால், உங்களுக்கு ஒருபோதும் OTP எண்கள் வராது என்பதையும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.