பிகார் மாநிலத்தில் பயிர்களை நாசம் செய்யும் நில்கை எனப்படும் ஒருவகை மாட்டை கொல்வதற்கு அரசே ஒப்புதல் அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நில்கை எனப்படும் காட்டுமாடுகள் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளன. இது குறித்து அரசிடம் முறையிட்ட விவசாயிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். இது குறித்து முடிவு செய்த அரசு, நில்கை மாடுகளை கொல்வதற்கு ஒப்புதல் அளித்தது. அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் மட்டும் 300 நில்கை மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. நில்கை மாடுகளை கொல்வதற்காக பீகார் வனத்துறை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுபவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
இந்த வேட்டையில் காயமடைந்த நில்கை மாடு ஒன்று உயிரோடு புதைக்கப்படும் கோர காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காலில் காயமடைந்த நில்கை மாட்டை குழி தோண்டி அதில் தள்ளிய ஜேசிபி இயக்குநர், அந்த மாட்டின் மீது மண்ணை தள்ளி உயிரோடு புதைத்தார். இந்த செயல் உள்ளூர் அரசு நிர்வாகத்தின் அனுமதியின் பேரிலேயே நடைபெற்றிருக்கிறது என்பது அதிர்ச்சிக்குறிய விஷயம். நில்கை மாடு உயிரோடு புதைக்கப்படும் காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
Nilgai नील"गाय" buried alive in #Bihar #India
The greatness of a nation can be judged by the way its animals are treated~#MahatmaGandhi#AnimalCruelty@BiharForestDept @Manekagandhibjp@PetaIndia @narendramodi @ParveenKaswan @SanctuaryAsia@BiharPoliceCGRC @moefcc
இதைப் பற்றி 1,153 பேர் பேசுகிறார்கள்
நீல காளை என்று அழைக்கப்படும் நில்கை மாடுகள் இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய காட்டு மாடு (nilgai antelope) வகையைச் சார்ந்தது என்று கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விவசாயிகள் தரப்பில் நில்கை மாடுகள் கொல்லப்படுவது குறித்து எந்த வருத்தமும் இல்லை. நில்கை மாடுகள் தொடர்ந்து பயிர்களை அழிப்பதால் பலர் விவசாயத்தையே கைவிட்டுவிட்டதாகவும், மனிதர்களை அவைகள் கொல்வது தொடர்கதையானதால் தான் அரசிடம் முறையிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கையை அவசர காலத்தில் எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
credit ns7.tv