புதன், 4 செப்டம்பர், 2019

எட்டாக்கனியாகிறதா தங்கம்?

Image
வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை தொட்டது. 
சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 288 ரூபாய் அதிகரித்து, 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.  கடந்த 40 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, தங்கத்தின் விலை இமாலய உச்சத்தை தொட்டதற்கு காரணம், ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பின் உயர்வே என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால்,  நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

credit ns7.tv

Related Posts: