வியாழன், 5 செப்டம்பர், 2019

சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்திவரும் ஆசிரியை...!

Image
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே அரசு நடுநிலைப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர் தனியார் பள்ளிகளையே தேர்வு செய்யும் சூழலில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில், திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, ஆசிரியை ஒருவர் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து, பெற்றோரின் பார்வையை அந்த பள்ளியின் பக்கம் திருப்பியுள்ளார்.
125 மாணவர்கள் பயிலும் அந்த பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் பெருந்தேவி, 3 லட்சம் ரூபாய் செலவில் இந்த மாற்றத்தை செய்துள்ளார். இந்த ஸ்டார்ட் வகுப்பறையில், மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.
credit ns7.tv