வியாழன், 5 செப்டம்பர், 2019

வெறுப்பை விதைக்கும் வகையிலான ஒரு லட்சம் காணொளிகளை நீக்கிய யூடியூப்!

Image
17000 யூடியூப் சேனல்களில் இருந்து வெறுப்பை விதைக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு லட்சம் வீடியோக்களை நீக்கியிருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காணொளிகளை பதிவேற்றும் பிரபல வலைதளமான யூடியூப், யூடியூப் சேனல்களில் காணொளிகளை பதிவேற்றம் செய்வதற்கான விதிமுறைகளை மிகவும் கடினமாக்கியது. வெறுப்பை உண்டாக்கும் வகையில் பதிவிடப்படும் காணொளிகள் மற்றும் பின்னூட்டங்கள் பாரபட்சமின்றி நீக்கப்படும் என்று யூடியூப் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி யூடியூப் விதிமுறைகளை பின்பற்றாமல் பதிவேற்றம் செய்யப்பட்ட 1,00,000கும் மேற்பட்ட வெறுப்பை உண்டாக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை 17,000 யூடியூப் சேனல்களில் இருந்து நீக்கியுள்ளது. அதோடு வெறுப்பை உமிழும் வகையில் பதிவிட்ட 500 மில்லியன் (50,00,00,000) கமெண்ட்டுகளையும் நீக்கியிருக்கிறது.

credit ns7.tv