பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் அக்கட்சியிலிருந்து விலகி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் முறைப்படி இணைந்தார்.
சமீபத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினை, பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் புகழ்ந்து பேசியது பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அக்கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசகுமாருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, பி.டி அரசகுமார் சந்தித்து, திமுகவில் இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் தேசிய தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை எனக்கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மாற்றம் நிகழும் எனக் கூறிய பி.டி.அரசகுமார், தாயகத்திற்கு திரும்பியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதனிடையே நடுங்குலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக முதல்வரின் எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகனுமான விஸ்வநாதன் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இனி திமுகவில் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியும் எனவும் விஸ்வநாதன் தெரிவித்தார்
credit ns7.tv