கர்நாடக மாநிலத்தில் ஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்து எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாத பரிதாப நிலையில் எடியூரப்பா உள்ளதாக விமர்சித்தார்.
மேலும் பெரும்பான்மைக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் எந்த நேரத்திலும் எடியூரப்பா அரசு கவிழ்ந்து, கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்தல் வரலாம் என்றும் சித்தராமையா ஆரூடம் கூறியுள்ளார்.
credit ns7.tv