source: ns7.tv
நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.
நாகைமாவட்டம் வேதாரண்யம் அடுத்தகோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்தசரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்துசெல்லும்.
ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரைப் போக்கவும் உணவுக்காகவும் அங்குள்ளபறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கில் வந்துசெல்கின்றன.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா,ஈரான்,ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்புசேர்க்கும்.
மேலும் கொசு உள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்குநாரை, சிவப்புகால்உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலைவாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவிலிருந்தவரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்டிக்டேன் (ஆலா) இமாச்சலப்பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் என 25 வகைப் பறவைகள் ஆயிரகணக்கில் வந்துள்ளன.
கடந்த மாதம் வீசிய கஜா புயலால் நூற்று கணக்கான பறவைகள் இறந்து விட்டன. கஜா புயலுக்கு பிறகு வெளிநாட்டு பறவைகள் ஆயிரகணக்கில் தற்போது கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு குவிய தொடங்கியுள்ளன.