ரிசர்வ் வங்கியில் இருந்து ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களினால், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன என்றார்.
ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பெற்று, அதனை முதலாளிகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும், மத்திய அரசு படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்க, திட்டமிட்டுள்ளதாகவும் சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்
credit ns7.tv