குப்பைகளை மறு சுழற்சி செய்யாத நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க நேரிடும் என தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை வாரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் திடக்கழிவு மேலாண்மை குறித்து தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை வாரிய தலைவர் ஜோதிமணி ஆய்வு நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை, மதுரை பெரிய நகரங்களாக இருப்பாதல் குப்பைகளை தரம் பிரித்து வாங்க முடிவதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவித்தார்.
மதுரையில் நாள் ஒன்றுக்கு 630 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக 40 இடங்களில் மறுசுழற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என தெரிவித்த ஜோதிமணி, மருத்துவமனை, ஹோட்டல் இருந்து வரும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என ஜோதிமணி வலியுறுத்தினார்.
credit ns7.tv