புதன், 5 ஆகஸ்ட், 2020

கொரோனா பலி எண்ணிக்கை;

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 28 பேரும் அடக்கம்.

அதிர்ச்சியூட்டும் கொரோனா உயிரிழப்புகள்:

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2,08,784 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 55,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:

தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 2,68,285 பேரில், 1,62,476 பேர் ஆண்கள், 1,05,78 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 27 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 28,92,395 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 55,122 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

சென்னையில் 1,023 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,04,027 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:

Image

ஆகஸ்ட் மாத பாதிப்பு விவரம்:

ஆகஸ்ட் 1 - 2,51,738
ஆகஸ்ட் 2 - 2,57,613
ஆகஸ்ட் 3 - 2,63,222
ஆகஸ்ட் 4 - 2,68,285