மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஏற்றுகொள்ள முடியாது என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை மூலம் கட்டாய மும்மொழி திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மக்களுக்கு பயன்படாது எனவும் அவர் கூறினார்.