அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல், வரும் 13ம் தேதி காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - மஹூவா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு வாயு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி வாயு புயல் மும்பைக்கு தெற்கே - தென்மேற்கு திசையில் 540 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த புயலானது அதி தீவிர புயலாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து வரும் 13ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் - மஹூவா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் தொலைவில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.