ஹிமாச்சல்பிரதேச மாநிலத்தில் திடீரென இடிந்து விழுந்த உணவகத்தில் இடிபாடுகளில் சிக்கிய பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 7 பேர் உயிரழந்த சம்பவம் மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல்பிரதேச மாநிலம் சோலன் பகுதியில் பகுதியில் உள்ள உணவகத்தில் நேற்று ஏராளமானோர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், திடீரென உணவகம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இன்னும் 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உணவகம் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட முதல்வர் ஜெய்ராம் தாகூர், மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
credit ns7.tv