சென்னை, நாகை உட்பட தமிழகத்தின் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் கிளை அலுவலகம் சென்னை மண்ணடி லிங்குசெட்டி தெருவில் இயங்கி வருகிறது. அங்குள்ள அலுவலகத்திற்கு சென்ற தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கம்யூட்டர், லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்த சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரிடம் காலை ஏழு மணி முதல் விசாரணை மேற்காண்டனர். இதேபோன்று சென்னை வேப்பேரியில் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஒருவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
சோதனை நடைபெறும் இடத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இயங்கும் தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் விதமாக இந்தியாவில் உள்ள சில அமைப்புகள் இளைஞர்களை மூளைச்சலவை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து, நாடு முழுவதும் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv