கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் விவசாயத்தை கைவிட்டுவிட்டு ஆடு வளர்ப்பில் விவசாயிகள் மும்மரம் காட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாமல் போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது வயல்களை வருடத்திற்கு நான்கு முறை உழவு செய்தும் நஷ்டத்தை மட்டும் சந்தித்து வருகின்றனர்.
எனவே தற்போது அவர்கள் விவசாயத்தை கைவிட்டு ஆடுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் அதிக லாபம் கிடைப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.