புதன், 11 ஜூலை, 2018

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டி.கே. ரெங்கராஜன் கேவியட் மனு தாக்கல்! July 11, 2018

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் சரியாக தமிழில் மொழிமாற்றம் செய்யாத 49 வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது. 



2 வாரத்தில் மருத்துவப் படிப்பிற்கான புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டு, அதுவரை கலந்தாய்வு நடத்தவும் நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், தங்களை கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என டி.கே.ரங்கராஜன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.