உலகின் மிக பழமையான நிறம், bright pink நிறம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிக பழமையான நிறம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்களின் ஆராய்ச்சி முடிவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. சகாரா பாலைவன பகுதியில் கண்டறியப்பட்ட 100 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையை உடைத்து எடுக்கப்பட்ட நிறமிகள் மூலம், உலகின் மிக பழமையான நிறம் bright pink என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பழங்காலத்து நிறமிகளை விட இந்த bright pink நிறம், 50 கோடி பழமை வாய்ந்தது எனவும் ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.
சகாரா பாலைவன பாறையில் இருந்து எடுகப்பட்ட நிறமியில் தண்ணீர் ஊற்றியபின், அது bright pink- ஆக மாறியது எனவும், அதில் இருக்கும் தண்ணீரை வற்றச்செய்த பின், ரத்த சிவப்பு நிறத்திற்கு மாறியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.