ஞாயிறு, 2 ஜூன், 2019

யானையை கொன்று அதன் தந்தங்களை எடுத்துச்சென்ற மர்ம நபர்கள்! June 02, 2019

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானையைக் கொன்று அதன் தந்தங்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட இருட்டிப்பாளையம் காப்புகாட்டு பகுதி அமைந்துள்ளது. இங்கே ஆண் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் முகம் சிதைக்கப்பட்டு, தும்பிக்கை வெட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்த யானையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 
தந்தம் வெட்டப்பட்ட யானை
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதன் தந்தங்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து யானைக்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையில் கோடாறியால் அதன் முகத்தை சிதைத்து தந்தங்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. கடம்பூர் மலைப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இதே போன்று ஒரு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. 
வனத்துறையினரின் அலட்சியத்தால் இவ்வாறு யானையைக் கொன்று தந்தத்தை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.