வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவருவதற்கான சோதனை ஓட்டத்தில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க ஜோலார்பேட்டை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் உபரி நீரை ரயில் மூலம் சென்னைக்கு எடுத்துச்செல்ல தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக, சுமார் 65 கோடி ரூபாயை நிதியாக அரசு ஒதுக்கியது.
இதையடுத்து, மேட்டு சக்கரக்குப்பம் பகுதியில் இருக்கக்கூடிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு வரும் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
தற்போது அடுத்தக்கட்ட பணிகளில் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 98 சதவீத பணிகள் முடிவு பெற்றதாகவும், நாளை முதல் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
credit : ns7.tv