"தேர்தல் ஆணையம் தில்லு முல்லு ஆணையமாக உள்ளது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பாஜக, அதிமுக மீது புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறை கூறினார். தலைமை தேர்தல் அதிகாரி 10 வாக்கு சாவடிகளில் மறு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 13 வாக்கு சாவடிகளில் மறு தேர்தல் அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மைனாரிட்டி அதிமுக அரசை காப்பாற்றும் வகையிலான சட்டப்பேரவைத் தலைவரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது எனவும் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
source ns7.tv