திங்கள், 1 ஜூலை, 2019

இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூல்! July 01, 2019

Image
சென்னையில் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து, ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.  
இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற விதிமுறையை கண்டிப்பாக பின்பற்றுமாறு, கடந்தவாரம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை காமராஜர் சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர். 
இதனால், அதிருப்தி அடைந்த பலர், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விதிமுறை தொடர்பாக, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

credit ns7.tv