இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஈஸ்டர் நாளில், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, ஹேமசிறி பெர்னாண்டோவை இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
credit ns7.tv