சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபணத்தங்கம் கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து, மூவாயிரத்து 416 ரூபாய்க்கும், சவரன் 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் 44 ரூபாய் 50 காசுகளுக்கும், பார் வெள்ளி கிலோ 44 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை உயர்வு போன்ற காரணங்களால் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source ns7.tv