புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநில அரசு தளர்வுகளுடன் அறிவித்திருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி , அங்கு ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம் என்றும், இரவு 9 மணி முதல் காலை 5 மணி முழு ஊரடங்கை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.