source ns7.tv
தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலால் மூடப்பட்ட பள்ளிகளை அடுத்த வாரம் திறக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது,
கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதனால், அங்கு நிலவும் அசாதாரண சூழலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டன. இந்நிலையில், தற்போது இலங்கையில் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனவே, தாக்குதலின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதனை அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். “தொடர் குண்டு வெடிப்புகளால் அசாதாரணமான சூழல் நிலவும் நிலையில், பாதுகாப்பு சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்ததாகவும், அதன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்”.