source:http://ns7.tv/ta/tamil-news/india/2/8/2018/%E2%80%8B-central-government-accepted-change-gst
ஜிஎஸ்டி தொடர்பான சட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான, 46 சட்ட திருத்தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த மசோதா, நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு, போக்குவரத்து, காப்பீடு உள்ளிட்டவை மீதான உள்ளீட்டு வரி வரவை, நிறுவனங்கள் கோருவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.