நாளை மறுநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர், வேலை பதிவு புத்தகத்தில் கையெழுத்திடாமல் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்வோம் என அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துல், நிலுவைத்தொகையை வழங்குதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவ்வாய் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர், இந்தநிலையில், திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றபடி, நிவாரணப் பணிகளில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என, தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.