செவ்வாய், 4 டிசம்பர், 2018

வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்! December 04, 2018

Image

வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
நாளை மறுநாள் இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 6ம் தேதி தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.