திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலக்கோட்டை சட்டமன்ற வேட்பாளர் சங்கரி பாண்டியனை ஆதரித்து, திண்டுக்கல் மாவட்டம் அழகுபட்டியில், மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செருப்பு தைத்தல், பரோட்டா சுடுதல் என வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source ns7.tv