source ns7.tv
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் :
6. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்
நீட் தேர்வு ரத்து செய்யப்படும், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என பல்வேறு அம்சங்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேர்தல் அறிக்கைகளை பல்வேறு கட்சியினரும் வெளியிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ''ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் எங்கள் கட்சி குழுவினரிடம் மூடிய கதவுகளுக்கு பின்னர் அறிக்கையை தயாரிப்பது நோக்கம் அல்ல. மக்களின் எண்ணத்தை எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறினேன்'' என்று தெரிவித்தார்.
''மேலும் இந்த தேர்தல் அறிக்கை உண்மையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன்'' என்றார் ராகுல்காந்தி.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் :
1. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
2. ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
3. மத்திய அரசிலுள்ள 22 லட்ச காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
4. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
5. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
6. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்
7.பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படும்.
8.பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
9. தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்களை தடுக்கப்படும்.
10. 2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.
11.2023 - 24ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்
12. மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும்.
காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.
காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.