நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என்று சொல்லிவிட்டு போலி மருத்துவர்களை உருவாக்கி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் காது, மூக்கு என பரிசோதித்த அதிகாரிகள், முகத்தைப் பார்க்க மறந்ததால் ஆள்மாறாட்டம் நடந்ததாக விமர்சனம் செய்தார்.
நீட் தேர்வில் தமிழகத்தில் ஆள்மாறட்டம் செய்தது போல், வெளிமாநிலத்தில் எத்தனை பேர் ஆள்மாறாட்டம் செய்திருப்பார்கள் என கேள்வி எழுப்பிய சீமான், நீட் தேர்வு எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்கும் என விமர்சித்தார். மேலும் 2 தொகுதி இடைத்தேர்தலுக்குதான் தற்போது தீபாவளி என்ற சீமான், தேர்தல் ஆணையம் ஐந்து தொகுதிகளாக தேர்தல் நடத்தினால் மக்கள் மேலும் மகிழ்ச்சி அடைவர் என்றும் கிண்டலடித்தார்..
credit ns7.tv