ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

ராகிங்கில் ஈடுபட்ட 20 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்! September 2, 2018

Image

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 20 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்த புகாரில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 20 பேரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ராகிங் தடுப்பு கமிட்டி பரிந்துரை செய்தது. இதையடுத்து, கேரள மாணவர்கள் மூவர் உள்ளிட்ட 20 மாணவர்களை கல்லூரியிலிருந்து 6 மாதமும், ஹாஸ்டலில் இருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்ய இந்திய மருத்துவ கழகத்திற்கு பரிந்துரைக்க  உள்ளதாகவும், இதற்கு சிசிடிவி ஒளிப்பதிவு காட்சிகளின் அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்கபட்டதாகவும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.